Sunday, August 16, 2015
காதல்!
சுற்றிடும் புவியை அச்சில்
சுழற்றிடும் விசையே காதல்!
வற்றரும் உயிரின் ஊற்றாய்
வளர்ந்திடும் உணர்வே காதல்!
சிற்றலை போலும் உள்ளே
சிலிர்த்திடும் மூச்சே காதல்!
பற்றறு இறைவன் தாளைப்
பற்றுதல் ஆன்மா காதல்!
உடம்பினை ஏற்கும் எல்லா
உயிர்களின் உரிமை காதல்!
நடந்திடும் நாட கத்தில்
நகர்ந்திடும் காட்சி காதல்!
தடம்பல மாறி மாறித்
தாவுதல் பொய்மைக் காதல்!
உடன்படு இருவர் உள்ளம்
ஒன்றுதல் உண்மைக் காதல்!
கண்களால் குறிப்பைக் காட்டிக்
களித்திடும் இளமைக் காதல்!
கண்களில் கருணை பொங்கக்
கனிந்திடும் முதுமைக் காதல்!
கண்களுள் நினைவைத் தேக்கிக்
காத்திடும் பிரிவின் காதல்!
கண்களும் மூடிப் போனால்
காண்பதோ முழுமைக் காதல்!
மேவிடும் அன்பு, பாசம்,
மெல்லிய நட்பு, நேசம்
காவியத் தமிழில் யாவும்
காதலாய்ப் பகரக் காண்போம்;
நீவிடும் இறகாய் வந்து,
நெஞ்சிலே நோயைக் கூட்டி,
ஆவியைக் கலக்கும் காதல்!
ஆற்றிடும் மருந்தும் காதல்!
கற்பனை வானில் நீந்திக்
கனவிலே மிதக்கும் காதல்!
சொற்களில் கவிதை கொஞ்சும்
சொர்க்கமாய் உலகம் மாறும்,
உற்றவர், பெற்றோர் முன்னால்
உண்மையை உரைக்கக் கூசும்;
அற்பமாம் கோழை தன்னுள்
அளித்திடும் வீரம் காதல்!
அடித்தளம் இல்லாக் காதல்
அவசரக் கோலம் ஆகும்!
படிப்பினை, நன்னம் பிக்கை,
பண்புடன் பொறுப்பு,வாழ்வின்
அடிப்படை ஞானம், ஓங்கும்
அன்பிலே தூய்மை, உள்ளே
நடிப்பிலா உள்ளம் சேர்ந்தால்,
நாளுமே தழைக்கும் காதல்!
வாலிப வயதில் எல்லார்
வாழ்விலும் வாராக் காதல்!
நூலிழை தூரம் தள்ளி
நோக்கிடின் காதல் காமம்!
போலியாய்க் காதல் காட்டும்
பொறுப்பிலா ஊட கத்தால்
வேலியில் பயிரைப் போன்றே
வீதியில் உழலும் காதல்!
காதலில் விழுந்து விட்டால்,
கண்களில் தூக்கம் போகும்,
காதலர் நீங்கும் போழ்தில்,
காலமும் பகையாய்த் தோன்றும்,
வேதனை வாட்டும்; சொந்த
வீட்டிலும் வெறுப்பைத் தூண்டும்;
நோதலே செய்யும்; வாழ்வை
நொடியிலே மாற்றும் காதல்!
கண்களில் புகுந்து, மெல்லக்
கருத்தினில் கலந்தே, ஓடும்
நுண்ணிய உயிரின் உள்ளே
நுழைந்திடும் ஒளியே காதல்!
தண்ணொளி நிலவின் முற்றம்
தணலெனக் தகிக்கும், இந்த
மண்ணிலே வாழும் காதல்,
மாசிலா மனிதர் மாண்பே!
நயனுடைத் தமிழ்மேல் காதல்,
நன்மைகள் எல்லாம் நல்கும்!
பயந்தநம் நாட்டை, வீட்டைப்
பண்பொடு காதல் செய்வோம்!
வியத்தகும் இயற்கை காக்க
விரும்புவோம்! உயிர்கள் போற்றும்!
உயர்ந்தநல் உழைப்பில் காதல்
ஓங்கிடின் ஒளிரும் வாழ்வே!
சுற்றிடும் புவியை அச்சில்
சுழற்றிடும் விசையே காதல்!
வற்றரும் உயிரின் ஊற்றாய்
வளர்ந்திடும் உணர்வே காதல்!
சிற்றலை போலும் உள்ளே
சிலிர்த்திடும் மூச்சே காதல்!
பற்றறு இறைவன் தாளைப்
பற்றுதல் ஆன்மா காதல்!
உடம்பினை ஏற்கும் எல்லா
உயிர்களின் உரிமை காதல்!
நடந்திடும் நாட கத்தில்
நகர்ந்திடும் காட்சி காதல்!
தடம்பல மாறி மாறித்
தாவுதல் பொய்மைக் காதல்!
உடன்படு இருவர் உள்ளம்
ஒன்றுதல் உண்மைக் காதல்!
கண்களால் குறிப்பைக் காட்டிக்
களித்திடும் இளமைக் காதல்!
கண்களில் கருணை பொங்கக்
கனிந்திடும் முதுமைக் காதல்!
கண்களுள் நினைவைத் தேக்கிக்
காத்திடும் பிரிவின் காதல்!
கண்களும் மூடிப் போனால்
காண்பதோ முழுமைக் காதல்!
மேவிடும் அன்பு, பாசம்,
மெல்லிய நட்பு, நேசம்
காவியத் தமிழில் யாவும்
காதலாய்ப் பகரக் காண்போம்;
நீவிடும் இறகாய் வந்து,
நெஞ்சிலே நோயைக் கூட்டி,
ஆவியைக் கலக்கும் காதல்!
ஆற்றிடும் மருந்தும் காதல்!
கற்பனை வானில் நீந்திக்
கனவிலே மிதக்கும் காதல்!
சொற்களில் கவிதை கொஞ்சும்
சொர்க்கமாய் உலகம் மாறும்,
உற்றவர், பெற்றோர் முன்னால்
உண்மையை உரைக்கக் கூசும்;
அற்பமாம் கோழை தன்னுள்
அளித்திடும் வீரம் காதல்!
அடித்தளம் இல்லாக் காதல்
அவசரக் கோலம் ஆகும்!
படிப்பினை, நன்னம் பிக்கை,
பண்புடன் பொறுப்பு,வாழ்வின்
அடிப்படை ஞானம், ஓங்கும்
அன்பிலே தூய்மை, உள்ளே
நடிப்பிலா உள்ளம் சேர்ந்தால்,
நாளுமே தழைக்கும் காதல்!
வாலிப வயதில் எல்லார்
வாழ்விலும் வாராக் காதல்!
நூலிழை தூரம் தள்ளி
நோக்கிடின் காதல் காமம்!
போலியாய்க் காதல் காட்டும்
பொறுப்பிலா ஊட கத்தால்
வேலியில் பயிரைப் போன்றே
வீதியில் உழலும் காதல்!
காதலில் விழுந்து விட்டால்,
கண்களில் தூக்கம் போகும்,
காதலர் நீங்கும் போழ்தில்,
காலமும் பகையாய்த் தோன்றும்,
வேதனை வாட்டும்; சொந்த
வீட்டிலும் வெறுப்பைத் தூண்டும்;
நோதலே செய்யும்; வாழ்வை
நொடியிலே மாற்றும் காதல்!
கண்களில் புகுந்து, மெல்லக்
கருத்தினில் கலந்தே, ஓடும்
நுண்ணிய உயிரின் உள்ளே
நுழைந்திடும் ஒளியே காதல்!
தண்ணொளி நிலவின் முற்றம்
தணலெனக் தகிக்கும், இந்த
மண்ணிலே வாழும் காதல்,
மாசிலா மனிதர் மாண்பே!
நயனுடைத் தமிழ்மேல் காதல்,
நன்மைகள் எல்லாம் நல்கும்!
பயந்தநம் நாட்டை, வீட்டைப்
பண்பொடு காதல் செய்வோம்!
வியத்தகும் இயற்கை காக்க
விரும்புவோம்! உயிர்கள் போற்றும்!
உயர்ந்தநல் உழைப்பில் காதல்
ஓங்கிடின் ஒளிரும் வாழ்வே!
kaavati sinthu
காவடிச் சிந்து!
ஓம்சக்தி ஓமெனும் ஓங்காரத் துள்ளொளிர் தாயே! - துணை
நீயே! - அருள்
வாயே! - வையம்
ஓங்குபு கழ்மரு வூரின்கண் தோன்றிய மாயே! -என்றும்
உனையேதொழ துணையேஅடி இணையேஎன வினையேஅற
ஓடியே வந்தெமைக் காப்பாய்! - நலம்
நாடியே இன்னருள் சேர்ப்பாய்!
ஆம்சக்தி நீயென்றே ஆன்மிக அன்பர்கள் தேட - உள்ளம்
நாடத் - தொண்டில்
கூட - மறை
ஆன்றபொ ருள்கண்ட அன்னையுன் மந்திரம் பாடத் - தமிழ்
அன்பின்உயர் பெண்ணின்புகழ் விண்ணின்நிகர் என்னும்படி
மன்றங்கள் தந்தஎம் குருவே! - அங்கு
நின்றெம்மைக் காத்திடும் திருவே!
-கவிஞர் சரோசா தேவராசு
மும்மண்டில வெண்பா
1) மின்னிடும் கன்னமோ! மென்மலர் அன்னமோ!
புன்னகை தண்முகம் பொன்எழில் சின்னமோ!
கண்கயல் வண்ணமோ! கண்டதும் என்மனம்
இன்பமே உன்னுதே இன்று
2) கன்னமோ! மென்மலர் அன்னமோ! புன்னகை
தண்முகம் பொன்னெழில் சின்னமோ! கண்கயல்
வண்ணமோ! கண்டதும் என்மனம் இன்பமே
உன்னுதே இன்றுமின்னி டும்
3) மென்மலர் அன்னமோ! புன்னகை தண்முகம்
பொன்னெழில் சின்னமோ! கண்கயல் வண்ணமோ!
கண்டதும் என்மனம் இன்பமே உன்னுதே
இன்றுமின் னிடும்கன்ன மோ!
Subscribe to:
Posts (Atom)